கும்மிடிப்பூண்டி: சொகுசு காரில் கடத்தப்பட்ட 1300 மதுபானம் பறிமுதல்: ஒருவர் கைது
மதுபானங்கள் கடத்தி வந்த காரை போலீசார் சோதனையிட்ட காட்சி.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்ட் ரமேஷ் மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்றை சந்தேகத்தின்பேரில் போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 14 மூட்டைகளில் மொத்தம் 1300 ஆந்திர மாநில மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
ஊரடங்கு காலகட்டத்தில் சென்னையின் புறநகரான திருவொற்றியூரில் விற்பனை செய்வதற்காக மேற்கண்ட மதுபாட்டில்கள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்லப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. கடத்தப்பட்ட மது பாட்டில்களில் மதிப்பு ரூ. 2லட்சம் ஆகும்.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சொகுசு காரை ஓட்டிச்சென்ற சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சிவகுமார் (37) என்பவரை நேற்று கைது செய்தனர். 1300 மது பாட்டில்களுடன் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu