கும்மிடிப்பூண்டி: 1700 குடும்பங்களுக்கு நிவாரண உதவி: எம்.எல்.ஏ கோவிந்தராஜ் வழங்கினார்!

கும்மிடிப்பூண்டி: 1700 குடும்பங்களுக்கு நிவாரண உதவி: எம்.எல்.ஏ கோவிந்தராஜ் வழங்கினார்!
X

கும்மிடிப்பூண்டியில் நடந்த நிகழ்ச்சியில் கோவிந்தராஜன் எம்எல்ஏ நிவாரண உதவிகளை வழங்கிய காட்சி.

கும்மிடிப்பூண்டி அருகே 1700 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை கோவிந்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏகுவார்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஸ்ரீதர் ஏற்பாட்டில் கொரோனாவால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், டயாலிசிஸ் நோயாளிகள், நோயால் பாதிக்கப்பட்ட 48 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், என்.எஸ்.ஆர். உதவும் கரங்கள் சார்பாக தலா 5,000 ரூபாயும், ஈகுவார்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 1700 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், முட்டை உள்ளடங்கிய உணவு தொகுப்பினையும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்டக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ. குணசேகரன், எம்.எல். ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai future project