கும்மிடிப்பூண்டி: நடமாடும் காய்கறிகள் வண்டியை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ!

கும்மிடிப்பூண்டி: நடமாடும் காய்கறிகள் வண்டியை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ!
X

 நடமாடும் காய்கறி வண்டிகளை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டியில் நடமாடும் காய்கறி வண்டிகளை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் ஒரு வாரத்துக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள், மளிகை பொருட்கள் கடைகள் திறக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வேன்களில் மூலம் தெருக்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் நடமாடும் காய்கறி வண்டிகளை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. டி.ஜே. கோவிந்தராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் ஊராட்சி துணைத் தலைவி உமா மகேஸ்வரி, நகர செயலாளர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!