கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ திடீர் ஆய்வு!

கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ திடீர் ஆய்வு!
X

கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ கோவிந்தராஜன் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கோட்டக்கரையில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அன்றாட பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் காய்ச்சல், இருமல் உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை முறை சரியாக நடக்கிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். உடன் அதிகாரிகள் இருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்