கும்மிடிப்பூண்டி: அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறப்பு!

கும்மிடிப்பூண்டி: அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறப்பு!
X

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கும்மிடிபூண்டி அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் திறந்து வைத்து தனியார் இரும்பு உருக்கு ஆலை சார்பில் 6.2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு கவச ஆடை, மருத்துவ உபகரணங்களை மருத்துவமனைக்கு வழங்கினார்.

பின்னர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் பெருவாரியான வியாபாரிகள் பாதிப்பில்லாமல் கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தொகுதி வளர்ச்சிக்காக உதவிட வேண்டுமென சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!