கும்மிடிப்பூண்டி:60அடி கிணற்றில் விழுந்த நாயைமீட்ட தீயணைப்பு வீரர்கள்!

கும்மிடிப்பூண்டி:60அடி கிணற்றில் விழுந்த நாயைமீட்ட தீயணைப்பு வீரர்கள்!
X

மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள், மீட்கப்பட்ட நாயை காணலாம்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பத்தில் வினோத் குமார் என்பவர் நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார்.

அவரது வீட்டின் அருகே 3 மாத நாய்க்குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள பாழடைந்த 60 அடி ஆழ கிணற்றில் ஒரு நாய்க்குட்டி தவறி விழுந்தது.

இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் முட்புதர் மண்டிக்கிடந்த கிணற்றில் இருந்த நாய்க்குட்டியை கயிற்றின் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

Tags

Next Story
ai marketing future