கும்மிடிப்பூண்டி: தனியார் அனல்மின் நிலைய வளாகத்தில் திடீர் தீ விபத்து!

கும்மிடிப்பூண்டி தனியார் அனல் மின் நிலைய வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தைல மரங்கள் எரிந்து நாசமாயின.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பில்லா குப்பத்தில் தனியார் அனல்மின் நிலையம் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் பூட்டி கிடந்த இந்த அனல்மின் நிலைய வளாகத்தில் 10ஏக்கர் பரப்பளவிலான தைல மரங்கள் வளர்ந்து விரிந்து காணப்படுகிறது. காய்ந்து கீழே உதிர்ந்த அதன் இலைகளில் பற்றிய தீ காற்றின் வேகத்தால் மளமளவென பரவியதால் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதுகுறித்து அனல்மின் நிலைய காவலாளி ராமன் என்பவர் அளித்த தகவலை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில் இருந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீவிபத்தில் 100க்கும் மேற்பட்ட தைல மரங்கள் எரிந்து சாம்பலாகின. நல்ல வேளையாக அனல் மின் நிலையத்தில் தீ பரவாமல் தடுக்கப்ட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!