கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனை சாவடியில் 100 கிலோ மண்புழு பறிமுதல்!

கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனை சாவடியில் 100 கிலோ மண்புழு பறிமுதல்!
X

பறிமுதல் செய்யப்பட்ட மண்புழு மூட்டைகள் மற்றும் கார்.

கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனை சாவடியில் 100 கிலோ மண்புழு பறிமுதல்; போலீசார் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்றை வழிமறித்தனர். டிரைவர் திடீரென காரை வேகமாக ஓட்டிச் சென்றார்.

போலீசார் சுமார் அரை கிலோமீட்டர் துரத்தி சென்று காரை மடக்கிப்பிடித்தனர். உள்ளே பார்த்தபோது 100 கிலோ இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காரையும், மண்புழுவையும் பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு ஏற்பட்டது. மண்புலுவை கடத்தியதற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future