கும்மிடிப்பூண்டி:தொற்றால் இறந்த உடல்களை அடக்கம் செய்த ஊராட்சி தலைவர்!
கொரோனாவால் உயிரிழந்தவருக்கு இறுதிச் சடங்கு செய்த தேர்வழி ஊராட்சி மன்ற தலைவர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளன. இதில் கும்மிடிபூண்டி பேரூராட்சிக்குட்பட்ட ஒரு சிறிய ஊராட்சி தான் தேர்வழி ஊராட்சி. கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்தான் கிரிஜா குமார். அடிப்படையிலேயே சேவை மனப்பான்மை உடையவர் கிரிஜா குமார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஊராட்சியில் தொற்றால் பாதிக்கப்பட்ட சிலரில் இருவர் உயிரிழந்த நிலையில் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், உறவினர்களே இறுதிச் சடங்கை தவிர்த்துவிட்டதையடுத்து, தானே முன்வந்து இறந்த 2 சடலங்களையும் அரசு முறைப்படி நல்லடக்கம் செய்தார்.
தொற்றின் பீதியால் பல உறவுகள் விலகியிருக்க விதிவிலக்காய் செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu