கும்மிடிப்பூண்டி:18-44 வயதுடையயோருக்கு கொரோனா தடுப்பூசிமுகாம் தொடக்கம்

கும்மிடிப்பூண்டி:18-44 வயதுடையயோருக்கு கொரோனா தடுப்பூசிமுகாம் தொடக்கம்
X

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை செயல் அலுவலர் தொடங்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா தொடங்கி வைத்தார்.

கும்மிடிபூண்டி பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு 18 வயது முதல் 44 வயது வரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர் முதல் பெரியவர் வரை சமூக இடைவெளி யோடு தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பு எட்டியுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!