கும்மிடிபூண்டி: முதலமைச்சர் திட்டத்தில் 43 பேருக்கு உதவித்தொகை ஆணை!

கும்மிடிபூண்டி: முதலமைச்சர் திட்டத்தில்  43 பேருக்கு உதவித்தொகை ஆணை!
X

முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் 43 பேருக்கு அரசு உதவித் தொகைக்கான ஆணையை டி.ஜே.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 43 பயணிகளுக்கு அரசு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 6033 பேர் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான கோரிக்கை மனுக்கள் வழங்கியிருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு அதில் முதியோர், ஊனமுற்றோர், கணவனை இழந்தவர்கள் உள்ளிட்ட பயனாளிகள் 43 பேருக்கு முதற்கட்டமாக உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் வழங்கினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!