கும்மிடிப்பூண்டி:புதுவாயல் நாகராஜ் கண்டிகையை மாசுபடுத்தும் உருக்காலைபுகை

கும்மிடிப்பூண்டி:புதுவாயல் நாகராஜ் கண்டிகையை மாசுபடுத்தும் உருக்காலைபுகை
X

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவை சந்தித்து கிராம மக்கள் மனு அளித்தபோது.

கும்மிடிப்பூண்டி புதுவாயல் நாகராஜ் கண்டிகை கிராமத்தில் கரும்புகையால் மாசு அடைவதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே புதுவாயல் பகுதியில் உள்ளது நாகராஜ் கண்டிகை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் கிழக்கு மராவட்ட திமுக பொறுப்பாளருமான டி.கே.கோவிந்தராஜனை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ் கண்டிகை பகுதியில் தனியார் இரும்பு உருக்கு ஆலை உள்ளது. இதில் இருந்து வெளியேறும் கரும் புகையால் எங்கள் கிராமம் உள்பட சுற்று வட்டார பகுதிகள் மாசுபடுகிறது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

மனுவை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.



Tags

Next Story
வனத் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியரின் உற்சாக பாராட்டு!