Gummidi poondi Near Thieves கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் ஜட்டி திருடர்கள் கொள்ளை முயற்சி
Gummidipoondi Near Thieves
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தேர்வழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அஜீத் (வயது 25), மற்றும் இவரது நண்பர் இவர்கள் இருவரும் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர்.
சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு அதிகாலை இரண்டு மணி அளவில் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு அருகாமையில் இறங்கி நடந்து சென்றனர்.அப்போது அஜித் வீட்டின் கதவை திறக்க முயன்ற போது திடீரென பின்பக்கமாக ஒருவர் பிடித்துக் கொண்டு மற்றொருவர் ஓடி வந்துள்ளார்.இதனை சுதாரித்துக் கொண்ட அஜித் அவர்களை தள்ளி விட்டுவிட்டு அருகே உள்ள நண்பரை சத்தம் போட்டு வரவழைத்தார்.
பின்பு இருவரும் தெருக்களில் ஓடி வந்துள்ளனர். அப்போது ஐந்துக்கும் மேற்பட்டோர் சுமார் 200 மீட்டர் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஆடைகள் இன்றி ஜட்டி மட்டுமே அணிந்திருந்த கொள்ளையர்களை துரத்திச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் ஒருவர் மட்டும் விவசாய பகுதியில் குதித்து தப்பி ஓடினார், ஒருவர் பனைமரம் புட்புதரில் ஒளிந்துள்ளார்.
தொடர்ந்து பொதுமக்கள் இதுகுறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விரைந்து வந்த போலீசார் மட்டும் ஊர் பொதுமக்கள் 50.க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள தைலமரம்,பனைமரம் எல்லாம் அலைந்து தேடியுள்ளனர். அதில் ஆங்காங்கே ரத்த காயங்கள் பனை மட்டையில் இருந்தது தெரியவந்தது.ஆனால் விடிய விடிய தேடியும் மர்ம நபர்கள் தப்பி சென்று தெரியவந்தது.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் செந்தில் என்பவர் வீட்டில் இரண்டு ஜட்டி திருடர்கள் உள்ளே நுழைந்து உருண்டு சண்டை போட்டுள்ளனர்.ஆனால் அப்போதும் ஜட்டி திருடர்களை பிடிக்க முடியாமல் இருண்ட காட்டுப் பகுதியில் தப்பி சென்று விட்டனர்.அப்போது இரண்டு சவரன் தங்க நகை, 20.ஆயிரம் ரூபாய் பணம், ஒரு செல்போன் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.இது நாள் வரை அந்த ஜட்டி திருடர்களைப் பிடிக்காத காரணத்தினால் மீண்டும் அதே ஜட்டி திருடர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தால் தேர்வழி ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu