அரசுப்பள்ளி மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து நெகிழ்ச்சி

Alumni Meet | Tiruvallur News
X

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவ மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தனர்.

Alumni Meet -கும்மிடிப்பூண்டி அருகே அரசுப்பள்ளி மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

Alumni Meet -திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996 ஆண்டு 10ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 96திரைப்பட பாணியில் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 1996 - 1997 ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் வாட்சப் குழு மூலம் ஒன்றிணைக்கப்பட்டு குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்கள் 25 ஆண்டுகளின் முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

பள்ளிக்கு வந்த நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கியும், ஆரத்தழுவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 25வருடங்களுக்கு பிறகு சந்தித்த தங்களுடைய பள்ளி தோழர்கள், தோழிகளுடன் செல்பி எடுத்து கொண்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சால்வை, மாலை அணிவித்து காலில் விழுந்து ஆசி பெற்றனர். முன்னாள் மாணவர்களும், ஆசிரிய பெருமக்களும் பள்ளி நாட்களில் நடைபெற்ற தங்களின் பசுமையான நினைவுகளை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர். பள்ளியின் வளர்ச்சிக்கும், அடிப்படை வசதிகளை செய்து தருவது என அப்போது முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுடன் ஒன்றிணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!