கும்மிடிப்பூண்டி கூட்டுறவு வங்கியில் ரூ. 2.34 கோடி நகைக்கடன் தள்ளுபடி

கும்மிடிப்பூண்டி கூட்டுறவு வங்கியில் ரூ. 2.34 கோடி நகைக்கடன் தள்ளுபடி
X

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், கும்முடிப்பூண்டி எம்எல்ஏ-வுமான கோவிந்தராஜன், கடன் தள்ளுபடி செய்தவர்களுக்கு நகை வழங்கினார். 

கும்மிடிப்பூண்டி கூட்டுறவு வங்கியில் ரூ. 2.34 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

திமுக அரசின் தேர்தல் வாக்க்குறுதிப்படி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள கும்மிடிப்பூண்டி கூட்டுறவு மற்றும் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில், 602 நபர்களுக்கு சுமார் ரூ. 2.34 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையொட்டி, கும்மிடிப்பூண் டி கூட்டுறவு வங்கியில் நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நகை திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டிஜே கோவிந்தராஜன், தலைமைபொதுக்குழு உறுப்பினர் பா செ குணசேகர், பூவலம்பேடு ஊராட்சி மன்றத் தலைவரும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினருமான வக்கீல் பி வெங்கடாஜலபதி கலந்து கொண்டனர்.

மேலும், கூட்டுறவுசங்கத் தலைவர் அபிராமன், ஒன்றிய செயலர் மணிபாலன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சித் தலைவர் ஷகிலா அறிவழகன், கும்மிடிப்பூண்டி பேரூர் கழக செயலாளர் அறிவழகன், கூட்டுறவு வங்கியின் செயலாளர் , ஜெ.உமாபதி, மற்றும் வங்கி உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு அடமானம் வைத்திருந்த நகைகளை திரும்ப அளித்தனர்.

Tags

Next Story
how will ai affect our future