பெட்ரோல் ஊற்றி இருசக்கர வாகனங்கள் எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பெட்ரோல் ஊற்றி இருசக்கர வாகனங்கள் எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
X

இருசக்கர வாகனம் பற்றி எரியும் சிசிடிவி காட்சி.

கும்மிடிப்பூண்டி அருகே பெட்ரோல் ஊற்றி ஐந்து இருசக்கர வாகனம் எரிப்பு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(42). இவர் தம்புரெட்டிபாளையம் செல்லும் சாலை வழியில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை மற்றும் பொட்டிக்கடை கடைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் அதிகாலை 2 மணி அளவில் கடையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவ்வழியாக வந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் இருசக்கரம் வாகனம் தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக உரிமையாளர்களுக்கு பின்பக்க வழியாக தகவலை கூறி அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். பின்பு தீயணைப்பு வீரர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஆனால் இரு சக்கர வாகனங்கள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து குமார் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் கடை அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீப்பற்றி வைத்து ஓடும் காட்சி சிசிடிவி பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்து போலீசார் குமார் மற்றும் அவருடைய உறவினர்களுக்கு ஏதேனும் முன்பகை உள்ளதா இல்லை என்றால் இருசக்கர வாகனம் பழுது பார்ப்பதில் தகராறு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil