பெரியபாளையம் அருகே கேஸ் கசிந்து தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சேதம்

பெரியபாளையம் அருகே கேஸ் கசிந்து தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சேதம்
X

தீ விபத்தில் எரிந்த சேதமான குடிசை வீடு.

பெரியபாளையம் அருகே கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

பெரியபாளையம் அருகே சமையல் எரிவாயு உருளையின் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து 5 மாத குழந்தையுடன் நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த ஏனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமீர் இன்று மாலை இவர் தனது வீட்டில் மனைவி பிள்ளைகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது கசிவு காரணமாக சமையல் எரிவாயு உருளை திடீரென தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது ஐந்து மாத கைக்குழந்தை மற்றும் மனைவி பிள்ளைகளுடன் வீட்டில் இருந்து சாதுரியமாக அலறியடித்துக் கொண்டு வெளியேறினார். அப்போது சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறியதில் குடிசை வீடு முற்றிலுமாக தீ பற்றி எரிய தொடங்கியது. தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி அனைவரும் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்து பெரியபாளையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாக வீட்டில் இருந்த 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது இந்த தீ விபத்து தொடர்பாக பெரியபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!