பெரியபாளையம் குப்பைகளால் துர்நாற்றம்: மக்கள் வேதனை

பெரியபாளையம் குப்பைகளால் துர்நாற்றம்: மக்கள் வேதனை
X

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை 

பெரியபாளையம் ஊராட்சியில் சாலை ஓரத்தில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றாததால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 12,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள உணவகங்கள் குடியிருப்புகள் இருந்து வெளியேறும் குப்பைகளை இப்பகுதி வாசிகள் சாலை ஓரத்தில் பொட்டு செல்கின்றனர். இவையை முறையாக நாள்தோறும் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் வைத்து அப்புறப்படுத்துவது வழக்கம்.

ஆனால் இரண்டு நாட்களாக பெரியபாளையம் ஆரணி இடையே பெரியபாளையம் காவல் நிலைய அமைந்துள்ள சாலை ஓரத்தில் குப்பைகள் குவியல் குவியலாக தேங்கியுள்ளன. அவற்றை முறையாக தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தாததால் அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய், மாடுகள், பன்றிகள் உள்ளிட்டவை உணவைத் தேடி கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

பெரியபாளையம்-ஆரணி காலை என்பதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களும் சென்று வருகின்றன மேலும் அப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க இந்த சாலையை ட பயன்படுத்தி வருவார்கள். இதே நிலைமை பல்வேறு தெருக்களில் நீடித்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி வாசிகள் சிலர் தெரிவிக்கையில பெரியபாளையம் ஊராட்சியில் பவானி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள் இதனையடுத்து பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் தேவையில்லாத குப்பைகளை பொதுமக்கள் கொண்டு வந்து சாலை ஓரத்தில் கொட்டி செல்கின்றனர்

முறையாக குப்பை தொட்டிகளை அமைக்காததால் இந்த நிலைமை நீடித்து வருகிறது. இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகின்றனர்.

இது மட்டுமல்லாமல் பெரியபாளையம் பஜார் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் இறைச்சி கழிவுகளை அருகில் உள்ள ஆரணி ஆற்றில் கொட்டுவதாகவும் இதுபோன்று செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும். எனவே தற்போதாவது அனைத்து தெரு பகுதிகளிலும் குப்பை தொட்டிகளை அமைத்து அன்றாட குப்பைகளை பணியாளர்கள் வைத்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story