ஆந்திராவில் இருந்து லாரி கடத்த வரப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

Ganja Drug | Ganja Seized
X

பைல் படம்.

Ganja Drug -கும்மிடிப்பூண்டி அரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் நேற்றிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

Ganja Drug -ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் நேற்றிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி ஒன்றை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது லாரியில் லிப்ட் கேட்ட தடா பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 22) என்ற வாலிபர் (25) கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் ராமமூர்த்தியை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.





அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!