ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
X

கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுக கழக மருத்துவ அணி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுக கழக மருத்துவ அணி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு கிராமத்தில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கழக மருத்துவ அணி சார்பில் திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்ட மருத்துவ அணி இணை செயலாளர் மருத்துவர் அனுசியா விக்னேஷ் தலைமையில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பொது பரிசோதனை உள்ளிட்ட கண் பரிசோதனை, காசநோய் பரிசோதனை செய்து கொண்டனர். பின்னர் கண் சம்பந்தமான வழக்கு மூக்கு கண்ணாடி பொது நோய்கள் சார்ந்த நபர்களுக்கு மாத்திரை மருந்துகள் என வழங்கப்பட்டது.

பின்னர் பொது மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மதிய உணவாக பிரியாணி வழங்கினர்.

இதில் குட் சமாரிட்டன் அறக்கட்டளை நிறுவனர் ஆரோன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பெரும் தலைவர் கே.எம்.எஸ். சிவகுமார், முல்லை வேந்தன், டி.சி மகேந்திரன் சி எம் ஆர் முரளி ஆகியோர் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!