புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்
புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற மருத்துவ முகாம்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள பால கிருஷ்ணாபுரம் எல்.வி. நகர் எலைட் வேல்டு பள்ளி வளாகத்தில் எலைட் பள்ளிக்குழுமம், அட்சயம் பவுண்டேஷன் தமிழ்ச்சங்கம், பாடி யநல்லூர்,சோசியல் லயன் சங்கங்கள் அப்பல்லோ மருத்துவமனை சென்னை இணைந்து இலவச மாபெரும் இருதய பரிசோதனை பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு எலைட் பள்ளிக் குழு மம் முதன்மை நிர்வாக அதிகாரி அட்சயம் பவுண்டேஷன் தலைவர் லயன் டாக்டர் ஜி பால்செபஸ்டியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அஸ்வினி சுகுமாரன், ஒன்றிய கவுன்சிலர் மதன் மோகன், லயன் மாவட்ட ஆளுநர் ஸ்ரீதரன், முதல் துணை ஆளுநர் ரவீந்திரன், இரண்டாம் துணை ஆளுநர் ராஜேந்திர பாபு, ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளராக அட்சயம் பவுண்டேஷன் நிறுவனர் லயன் டாக்டர் எஸ்.ஜெயலட்சமி, அட்சயம் செயலாளர் லயன் டாக்டர் என்.சசிகுமார், துணைத்தலைவர் மகேஷ் பங்கேற்றனர்.
முகாமில் உயரம் எடை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஈசிஜி, எஃகோ கார்டியோகிராம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன.
முடிவில் பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம், ஆல்ஃபா நெக்ஸ்ட்ஜென் தமிழ்ச்சங்கம், சென்னை சோசியல் லோட்டஸ் ஷைன், காவாங்கரை சங்கங்கள் பாடியநல்லூர் லயன்ஸ் டிரஸ்ட் இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் சங்கம் சாசனத் தலைவர் அட்சயம் பவுண்டேஷன் துணைச் செயலாளர் லயன் டாக்டர் சென்னைபீலிக்கான், தமிழ் சங்கம் சாசனச் செயலாளர் லயன் வரதராஜன்,பொருளாளர் சீனிவாசன், சென்னை தமிழ்சிங்கம் லயன் சங் கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்தவாறு சிகிச்சை பெற்றுச்சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu