ஊத்துக்கோட்டை அருகே கருணாநிதி பிறந்த நாளையாெட்டி இலவச கண் பரிசோதனை முகாம்

ஊத்துக்கோட்டை அருகே கருணாநிதி பிறந்த நாளையாெட்டி இலவச கண் பரிசோதனை முகாம்
X

கச்சூர் கிராமத்தில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாமை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.

ஊத்துக்கோட்டை அருகே கருணாநிதி பிறந்தநாள் முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாமை எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.

கச்சூர் கிராமத்தில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாமில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் பங்கேற்பு.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளையொட்டி ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் கிராமத்தில் விவேகானந்த விஷன் தனியார் பள்ளியில் சென்னை பூந்தமல்லி அரவிந்தா தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.கே. சந்திரசேகரன் தலைமை தாங்கினார். விவேகானந்த விஷன் பள்ளியின் துணை இயக்குனர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தில்லை குமார், மாவட்ட கவுன்சிலர் சுதாகர், சிவன்யா, யோவான், சித்ரா பாபு, வெஸ்லி, செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் கலந்து கொண்டு முன்னதாக கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின் கண் சிகிச்சை முகாமை குத்துவிளக்கை ஏற்றி துவக்கி வைத்தார். இந்த முகாமில் பூந்தமல்லி அரவிந்த் கண் மருத்துவமனையின் 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 250 பேர் கண் சம்பந்தமான பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 60 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் நோயாளிகளுக்கு இலவசமாக மாத்திரை மருந்துகளை வழங்கப்பட்டது. இதில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், கோல்ட் மணி, இளைஞரணி அமைப்பாளர் ராமாராவ், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!