கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்

கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்
X

ஊத்துக்கோட்டை பேரூர் திமுக சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

ஊத்துக் கோட்டையில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,எல்லாபுரம் வடக்கு ஒன்றியம்,ஊத்துக்கோட்டை பேரூர் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவை இம்மாதம் முழுவதும் கொண்டாட முடிவு செய்தனர். இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்தனர்.

ஊத்துக்கோட்டை காவல் நிலையம் எதிரே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஊத்துக்கோட்டை பேரூர் திமுக,சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது.

மேலும்,கண் பரிசோதனை செய்து கொண்ட அனைவருக்கும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் குமரவேல் தனது சொந்த செலவில் கண்ணாடிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளுக்கு ஊத்துக்கோட்டை பேரூர் திமுக செயலாளர் அபிராமி தலைமை தாங்கினார்.பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்,சிறப்பு அழைப்பாளராக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான பி.ஜே.மூர்த்தி கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், இலவச கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும்,தமிழக முதல்வரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இலவச சேலை மற்றும் பிரியாணி,கேசரி,வாட்டர் பாட்டில் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன், விவேகானந்தா பள்ளியின் தாளாளர் ராஜேஷ்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோல்ட் மணி,கோகுலகிருஷ்ணன், திரிபுரசுந்தரி,பார்த்திபன், இந்துமதி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள்,மகளிர் சுய உதவி குழு பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!