/* */

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு பெரியபாளையத்தில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பை டிஎஸ்பி கணேஷ்குமார் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு
X

பெரியபாளையத்தில் நடைபெற்ற காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு 

விநாயகர் சதுர்த்தி அடுத்து ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி முன்னிட்டு பொதுமக்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் விநாயகர் சிலைகளை கரைக்கும் வகையில் காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா திங்கள் கிழமை அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை காவல் நிலைய துணைக் கண்காணிப்பாளர் எல்லைக்கு உட்பட்ட ஊத்துக்கோட்டை, பெண்ணாலூர்ப்பேட்டை, வெங்கல், பெரியபாளையம், ஆரணி ஆகிய ஐந்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 212 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.

இந்நிலையில்,ஆங்காங்கே பல்வேறு உருவங்களில் வைத்து வழிபட்ட இந்த விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி மூன்றாவது நாளான இன்றும், ஏழாவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது. இதில், இன்று நூற்றுக்கணக்கான சிலைகள் பழவேற்காடு ஏரியில் கொண்டு சென்று கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த ஊர்வலம் அமைதியாக நடைபெறவும், வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சீராக சென்று வரவும்,பொதுமக்கள் தங்களது பயணத்தை சிரமம் இன்றி மேற்கொள்ளவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது குறித்து ஐந்து காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, பெரியபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் ஏழுமலை, வெங்கல் காவல் ஆய்வாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் கலந்து கொண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பல்வேறு அறிவுரைகளை வழங்கி சிறப்புரை ஆற்றி பேசினார். இதன் பின்னர், காவல்துறையினரின் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு ஊர்வலம் பெரியபாளையத்தில் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் துவங்கி பெரியபாளையம் பேருந்து நிலையம், பெரியபாளையம் மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் காவல் நிலையத்தை வந்தடைந்தது.

Updated On: 22 Sep 2023 4:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  8. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  9. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  10. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி