கிணற்றில் விழுந்த இரண்டு காட்டு பன்றிகளை மீட்ட தீயணைப்பு துறையினர்
கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றியை மீட்ட தீயணைப்பு துறையினர்
கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி கிராமத்தில் தரை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு காட்டு பன்றிகளை கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் லாபகமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் அருகே அமைந்துள்ளது தேர்வழி கிராமம். இந்த கிராமத்தில் விவசாயத்திற்காக பயன்படுத்தி வந்த தரைக்கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் தற்போது தண்ணீரே இல்லாத நிலையில் இன்று இரவு அருகாமையில் உள்ள மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் கிழங்குகளை தின்பதற்காக இரண்டு ஆண் காட்டுப் பள்ளிகள் வந்துள்ளது. இரவு நேரத்தில் தெரியாமல் தரை கிணற்றில் தவறு விழுந்துள்ளது.
இந்த நிலையில் காலையில் அருகாமையில் உள்ள சிலருக்கு பன்றி கத்துவது போல் சத்தம் கேட்டது அறிந்து அருகே சென்று பார்த்துள்ளனர் அப்போது கிணற்றில் இருந்த இரண்டு காட்டுப் பன்றிகளை கண்டவர்கள் உடனடியாக கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காட்டுப்பன்றிகளை தேனின் மூலம் இறங்கி கயிறு கட்டி லாவகமாக அமைத்தனர் தொடர்ந்து மாதர்பாக்கம் வனச்சரக அலுவலர் சுரேஷ்பாபுவிற்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்து இரண்டு பன்றிகளையும் விட்டுச்சென்று நேமலூர் காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.
ஏரியில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் அருகே கொசவன் பேட்டை ஊராட்சியில் சுமார் 4000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சியில் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இந்த ஊராட்சி அஞ்சாத அம்மன் கோவில் அருகே ஏரி ஒன்று உள்ளது. ஏரி அருகே உள்ளதால் நிலத்தடி நீர் எப்போது குறையாமல் இருக்கும். இதனால் இந்த ஏரி அருகே ஊராட்சிக்கு சொந்தமான மூன்று ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் இங்கிருந்து பைப்புகள் மூலம் மோட்டார்கள் வைத்து தண்ணீரை ஊராட்சியில் பல்வேறு பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிக்கு கொண்டு சென்று அங்கு சேமித்து காலை,மாலை என இரு வேலைகளில் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும்.
இந்நிலையில் ஊராட்சியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை இந்த ஏரியின் அருகே கொட்டுவதால் இந்த குப்பைகள் ஏரியில் உள்ள நீரில் கலந்து நீர் மாசு ஏற்பட்டு சுகாதாரம் சீர்கேடு ஏற்படும் அவல நிலை உருவாகியுள்ளது.
மேலும் பெரியபாளையம்- புதுவயல் சாலை அருகே இருப்பதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன இந்த கூட்டப்படும் குப்பை இறைச்சி கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் பறந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்கள் மறைப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது
எனவே இது போன்று செயல்கள் ஈடுபடுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu