அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் விவசாயிகள் கவலை
பெரியபாளையம் அருகே காக்கவாக்கம் மற்றும் துளவெடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர் சாய்ந்து நீரில் மூழ்கி நெல் முளைத்து அழுகியதால் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேதனை
Farmer News Today -பெரியபாளையம் அருகே காக்கவாக்கம் மற்றும் துளவெடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் பயிர் சாய்ந்து நீரில் மூழ்கி நெல் முளைத்து அழுகியதால் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேதனை.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே காக்கவாக்கம் துளவேடு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் காலம் காலமாக நெற்பயிர் செய்து விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். சித்தூர் முதல் தச்சூர் வரை ஆறு வழிச்சாலை திட்டத்தில் அரசு நிலத்தை கையகப்படுத்திய பின் எஞ்சியுள்ள நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக வும் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஏழு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது .
இந்த நிலையில் இந்த மழை நீரானது வெளியே செல்வதற்கு வழி இல்லாமல் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் தேங்கி நின்றதால் 606 ரகம் பயிரிட்டு ஓரிரு தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி. அழுகையும் நெற்பயிர்கள் முளைத்தும் சேதமானது. இதன் காரணமாக 50க்கும் மேற்பட்ட அப்பகுதி விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மழையின் காரணமாக சேதம் அடைந்ததால் அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அடுத்த போகத்திற்கு விதைப்பதற்கு வழி இல்லாமலும் திண்டாடுவதாகவும், தமிழக முதல்வர் உடனடியாக விவசாயிகளின் நலனின் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu