நங்கபள்ளம் கிராமத்தில் விவசாயிகள் கால்வாயை ஆக்கிரமித்து மதில்சுவர் கட்டுவதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நங்கபள்ளம் கிராமத்தில் விவசாயிகள் கால்வாயை ஆக்கிரமித்து மதில்சுவர் கட்டுவதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
நங்கபள்ளம் கிராமத்தில் விவசாயிகள் கால்வாயை ஆக்கிரமித்து மதில்சுவர் கட்டுவதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த குருவாட்டுச்சேரி ஊராட்சி, நங்கபள்ளம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு உள்ள கிராமப்புற மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
அத்துடன் கிராமத்தை ஒட்டி ஈசா என்ற பெரிய ஏரி உள்ள நிலையில் அந்த உபரி நீரானது மழைக்காலங்களில் மதகு வழியாக நங்கபள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குளங்கள் கால்வாய் வழியாக நீர் பாசனம் செய்து விவசாயம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஈசா ஏரியில் இருந்து உபரி நீர் ரயில்வே தரைப்பாலம் கீழ் வழியாக கால்வாய்கள் மூலம் வருவது வழக்கம் தற்போது அந்த கால்வாயை ஒட்டி தனியார் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் மேற்கொண்ட வருகின்றனர். இந்த நிர்வாகம் சுற்றுசுவர் எழுதுவதற்காக விவசாய கால்வாய்களை ஆக்கிரமித்து கால்வாய் நடுவே பீம்கள் கட்டப்பட்டது.
இதை அறிந்த விவசாயிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கால்வாய்கள் உள்ள பீம்களை அகற்றி தூர்வார வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தைகள் ஓரிரு நாட்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் முறையாக கால்வாய் இடத்தை ஆலந்து தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர்.இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu