பெரியபாளையம் அருகே ஆறு வழிச்சாலை பணியை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

பெரியபாளையம் அருகே ஆறு வழிச்சாலை பணியை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்
X

பெரியபாளையம் அருகே புதிய 6  வழிச்சாலைக்காக பணி செய்ய வந்த அதிகாரிகளை பணி செய்ய விடாமல்  தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்.

Farmers protest against the construction of a six-lane road

பெரியபாளையம் அருகே புதிய 6வழி சாலைக்காக முப்போகம் விளையும் நிலங்களை சாலைக்கு கையகப்படுத்த வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126.5கி.மீ தூரத்திற்கு 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க ஏற்கெனவே மற்றொரு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த துறைமுகங்களை ஆந்திர மாநிலத்துடன் இணைப்பதற்காக சுமார் 3200கோடி ரூபாய் மதிப்பீட்டில் தச்சூர் - சித்தூர் 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

விவசாய நிலங்களை கையகப்படுத்த ஏற்கெனவே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரியபாளையம் அருகே ஆலப்பாக்கம் பகுதியில் சாலைக்காக விளை நிலங்களை பொக்லைன் எந்திரம் மூலம் சரிசெய்து கொண்டிருந்தனர். இதனை அறிந்த நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடி ஆலப்பாக்கம் விளைநிலப் பகுதிக்கு வந்த பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தது முப் போகம் விளையக்கூடிய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது மாற்று வழியே கொண்டு செல்ல வேண்டும் என அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி மற்றும் தனி தாசில்தார் லியோ , நில எடுப்பு தாசில்தார் அரிகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆலப்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது


Tags

Next Story
future of ai art