ஊத்துக்கோட்டை அருகே ஆறுவழி சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே ஆறுவழி சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்
X

ஆறுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஊத்துக்கோட்டை அருகே ஆறுவழி சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியது தொடர்பாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக ஆந்திரா மாநிலம் சித்தூர் முதல் தச்சூர் வரையில் சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் இணைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள 34 கிராமங்கள் வழியாக 116 கிலோ மீட்டர் தொலைவில் 1238 ஏக்கர் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்டங்களாக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரியபாளையம் அருகே வடமதுரை பகுதியில் சாலைப் பணிகளுக்காக அலுவலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

விளை நிலங்களை அழித்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சாலை பணிகளை மேற்கொள்ள கூடாது எனவும் எதிர்ப்பை மீறி பணிகள் நடைபெற்றால் தொடர் போராட்டங்களில் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும், அதுவரையில் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறையினர் கேட்டு கொண்டனர். சாலை பணிகள் நடைபெற்றால் கட்டாயம் போராட்டம் நடைபெறும் எனவும் தங்களை கைது செய்தாலும் சாலை பணிகளை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!