புதிய சிப்காட் பூங்காவிற்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதிய சிப்காட் பூங்காவிற்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

கும்மிடிப்பூண்டி அருகே புதிதாக அமைய உள்ள சிப்காட் பூங்காவிற்கு விலை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் கிராமத்தில் புதியதாக சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக கிராமத்தில் உள்ள விளை நிலங்களை அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே நேற்று 200க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். முப்போகம் விளைய கூடிய விளை நிலங்களை அரசு கையகப்படுத்திட அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

விவசாயிகளின் விளை நிலம் மட்டுமல்லாது, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளையும் கையகப்படுத்துவதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வரும் சூழலில் வேறு தொழிலுக்கும் செல்ல முடியாமல் வாழாவதாரம் பாதிக்கும் என்பதால் நிலத்தினை விட்டு கொடுக்க முடியாது என தெரிவித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் இணைந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை பேரணியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல அனுமதி மறுத்து வருவாய்த்துறையினர் வந்து மனுக்களை பெற்று கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்