Farmers Demand Relief Fund கும்மிடிப்பூண்டி அருகே கனமழையால் சேதமடைந்த 5 ஏக்கர் வாழைத்தோட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே சின்ன ஒபுளாபுரம் கிராமத்தில் ஐந்து ஏக்கர் வாழைமரங்கள் புயல் காரணமாக சேதமடைந்துள்ளது.
Farmers Demand Relief Fund
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில் 1500 க்கும் மேற்பட்ட கிராம புற மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு உள்ள சின்ன ஒபுளாபுரம், எளாவூர் பகுதி, ஈச்சங்காடு மேடு, நாகராஜ் கண்டிகை, மகாலிங்க நகர், துரப்பள்ளம், ரயில்வே ஸ்டேஷன் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களது விவசாய நிலங்களில் பெரும்பாலும் வாழை, கம்பு,கிழங்கு, வெண்டைக்காய், கத்திரிக்காய்,முள்ளங்கி, அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி, வேர்க்கடலை,கொய்யா ஆகிய பருவத்திற்கேற்ப உணவு வகைகளை விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் தமிழக அரசு பயிர் காப்பீடு திட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவிடுமாறு வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக பெரும்பாலான விவசாயிகள் வாழை மரம், கிழங்கு மட்டுமே பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
பெய்த பருவ மழை காரணமாக திடீரென சூறாவளி காற்று திடீர் திடீரென வீசும் காரணத்தினால்அதிக அளவில் வாழை மரங்கள் வாழைக்காய் வருவதற்கு தயார் நிலையில் இருக்கும் பொழுது வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு வாழை மரத்திற்கும் சிறிது காற்று பிடிக்கும் வகையில் கொம்புகள் கொண்டு அதனை கட்டப்பட்டு பின்பு அறுவடை செய்து கோயம்பேடு, கும்மிடிப்பூண்டி பஜார், ஆரம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு சுப நிகழ்ச்சிகளுக்கு வாழை இலை, வாழைக்காய், வாழைப்பழம் உள்ளிட்ட விவசாயம் செய்தும், ஆனால் தற்பொழுது சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் ஊழல் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி அருகே சின்ன ஒபுளாபுரம் பகுதியில் சுமார் 5 ஏக்கருக்கு மேல் அதே பகுதியைச் சேர்ந்த மணிமொழி, அருணாச்சலம் ஆகியோருடைய வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது இது சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதிகாரிகள் இதுவரை மேற்கண்ட வாழை மரங்களை ஆய்வு செய்து அதற்கான இழப்பீடு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரி செய்யவில்லை என பெரிய ஒபுளாபுரம் விவசாய சங்கம் சார்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu