/* */

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படும்: விவசாய சங்க தலைவர்

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

டெல்லியில் மீண்டும்  விவசாயிகள் போராட்டம் நடத்தப்படும்: விவசாய சங்க தலைவர்
X

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் அவசர ஆலோசனை கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் பி.ஆர் பாண்டியன்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பி.ஆர் பாண்டியன் பங்கேற்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நெல் குவிண்டாலுக்கு ரூ.3000, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 வழங்க வேண்டும், நிலக்கரி எடுக்கும் வீராணம் ஏரி திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து வரும் 10-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் நில அபகரிப்பு அதிகரித்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் அதற்கு துணை போவதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களின் ஏரிகளை அபகரிப்பது பாதுகாக்கப்பட வேண்டும். நீர்நிலைகளை பாதுகாத்து தூர்வார உயர்மட்ட குழு அமைத்து முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும். பெரியபாளையம் உள்ளிட்ட 11 கிராமங்களில் 9 ஆயிரம் ஏக்கரில் திருவள்ளூர் சேட்டிலைட் பூங்கா அமைக்க தமிழக அரசு முயற்சிப்பதாகவும் முதல்வர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


விவசாயிகளுக்கு பாதுகாப்பான ஆட்சி என சொல்லி விட்டு விவசாயிகளை அழிக்கும் ஆட்சியாக மாறக்கூடாது. முதல்வர் இதற்கு தீர்வு காண வேண்டும். வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தின் போது, விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றப்படும் சட்டங்கள், திட்டங்கள், நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. இதை முன்கூட்டியே முதல்வருக்கு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார் .

2023 ஆம் ஆண்டின் முதல் ஆளுநர் அறிவிப்பின் மீது முதல்வர் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும். கொசஸ்தலையாறு, ஆரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் 6000 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதால், கடலில் கலக்கும் தண்ணீரை கதவணைகள் அமைத்து தடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பு தொடர்பாக அமைச்சர்கள் முரண்பட்ட கருத்து தெரிவிப்பதால் விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனர். இதற்கு முதல்வர் மட்டும் பதில் அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

டெல்லியில் போராட்டம் நடத்திய போது குழு அமைத்து, விலை நிர்ணயம் செய்யப்படும் என பிரதமர் கூறி போராட்டத்தை சீர்குலைக்க செய்தார். ஆனால் இதுவரை விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 5 Jan 2023 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?