ஈகுவார் பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை மீட்க கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈகுவார் பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை மீட்க கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார் பாளையம் கிராமப் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்க கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து விவசாய சங்கத்தினர் வட்டாட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க வட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சம்பத், ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், ராஜேந்திரன், சூரிய பிரகாஷ், கோபாலகிருஷ்ணன், லோகநாதன்,குப்பன், வெங்கடாதிரி, செல்வராணி, சுந்தரம்மா, மகேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில விவசாய சங்கத்தின் செயலாளர் துளசி நாராயணன், கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில் ஈகோவாரபாளையம் கிராமத்தில் சுமார் 1000.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும். இந்த ஊராட்சியில் சுமார் 370 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலங்களை பலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டியதாகவும் .

திமுக ஆட்சியில் இப்பகுதியில் குளம் ஒன்றை ஜே.சி.பி. எந்திரம் வைத்து குளத்தை சீர்படுத்தியதாகவும். அந்த இடத்தை முக்கிய பிரமுகர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும். இது சம்பந்தமாக கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பலமுறை கும்மிடிப்பூண்டி தாசில்தார் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்க கோரி மனு அளித்தும். எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதனைக் கண்டித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்கள் மீது போராடிய பொதுமக்கள், விவசாயிகளின் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பேசினார்.

முடிவில் விவசாய சங்கத்தின் வட்டச் செயலாளர் ரவி நன்றி கூறினார்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!