கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து
கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ரயில் பெட்டிகள் சரிந்து விழுந்து கிடக்கும் காட்சி.
கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்னை பெரம்பூர் வழியாக திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை நோக்கி பீகார் மாநிலம் தர்பாங்காக்கு இன்று இரவு எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. கவரப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 10 பெட்டிகள் தரம் புரண்டன.
இதில் இரண்டு குளிர்சாதன பெட்டிகள் தீ பற்றி மள மள என எரிந்தது. இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே துறை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும பொதுமக்கள் தன்னார்களாக தாங்களே முன்வந்து விபத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்டு வருகின்றனர். விபத்துக்கு சிக்னல் கோளாறா அல்லது ஓட்டுநர் தூக்க கலக்கமா காரணம் என இன்னும் தெரியவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தில் பயணிகள் யாரும் உயிரிழந்தார்களா? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
படுகாயம் அடைந்தவர்களை கவரப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இரவு நேரம் என்பதால் பணிகள் சற்று தாமதமாகவே நடைபெற்று வருகின்றது மேலும் அவ்வழியாக செல்லும் ரயில்கள் தாமதமாக செல்கின்றன. இந்த ரயில் விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu