கும்முடிபூண்டியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு
முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். அவருக்கு கட்சியைச் சேர்ந்த முக்கிய அப்புறம் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்முடிபூண்டி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கும்மிடிப்பூண்டி கி.வேணு இவர் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் 2.முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கும்மிடிப்பூண்டி கி.வேணு.
இவர் திமுகவில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராகவும், உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
1975 ஆம் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியோடு ஓர் ஆண்டு சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது கி.வேணு திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், திமுக தலைமை கழகம் சார்பில் 2021 ஆம் ஆண்டிற்கான முப்பெரும் விழாவில் 5 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அதில், கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான கி.வேணுவிற்கு கலைஞர் விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு பத்து மணி அளவில் காலமானார்.
அவரது உடலை இன்று மாலை 5 மணிக்கு மேல நல்லடக்கம் செய்ய உள்ள நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சொந்த ஊரான கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று 12. மணி அளவில் அவரது இல்லத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்த உள்ளார். மேலும் அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu