அரசு சுகாதார நிலையத்தில் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
மேற்கூறையுடன் கூடிய காத்திருப்பு அறை ஆகியவற்றை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்
கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு 32.32 லட்ச ரூபாய் மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவை முற்றுகையிட்ட கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கினார்கள்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு தனியார் தொழிற்சாலை மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் 32.32 லட்சத்தில் மருத்துவ உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், ஊராட்சி தலைவர் உஷா ஸ்ரீதர் பங்கேற்று மருத்துவ உபரணங்களை ஈகுவார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கினர். மேலும் மேற்கூறையுடன் கூடிய காத்திருப்பு அறை ஆகியவற்றை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
அப்போது கடந்த திமுக ஆட்சியில் தோண்டப்பட்ட குளம் உள்ளிட்ட சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு நில ஆக்ரமிப்பை பல மாதங்களாக அகற்றாமல் வட்டாட்சியர் கண்ணன் கிடப்பில் போட்டுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் உஷா தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவை முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.
அப்போது ஆக்கிரமிப்பு குறித்து எதுவுமே தெரியாதது போல் வந்த வட்டாட்சியர் கண்ணனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வட்டாட்சியர் கண்ணன் பொதுமக்களிடமிருந்து தப்பி எதுவுமே நடக்காதது போல் காரில் ஏறி சென்றார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மாவட்ட ஆட்சியரால் மீட்கப்பட்ட பல ஏக்கர் அரசு நிலங்கள் வட்டாட்சியர் கண்ணன் பொறுப்பேற்றதில் இருந்து மீண்டும் தனிநபரால் கையகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu