எல்லாபுரம் ஒன்றியக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிப்பு

எல்லாபுரம் ஒன்றியக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிப்பு
X

எல்லாபுரம் ஒன்றியக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணித்ததால் கூட்ட அரங்கு வெறிச்சோடி கிடக்கிறது.

எல்லாபுரம் ஒன்றியக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று தலைவர் வடமதுரை கே.ரமேஷ் தலைமையில், துணைத்தலைவர் சுரேஷ் முன்னிலையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 18 பேர் உள்ள நிலையில் ஒரு கவுன்சிலரை தவிர மற்ற 17 உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

இதுகுறித்து உறுப்பினர்கள் கூறுகையில், எல்லாபுரம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெறுவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் நடைபெற வேண்டும் என்றால் அதற்கு முன்பு அனைத்து கவுன்சிலர்களையும் அழைத்து தீர்மானம் குறித்து கவுன்சிலர்களிடம் கேட்பார்கள். ஆனால் இந்த தலைவர் கவுன்சிலர்களிடம் எதுவும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். மேலும் தீர்மான பட்டியலும் தாமதமாக வந்ததால் கூட்டத்தை நாங்கள் புறக்கணித்தோம் என்றனர்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கூறுகையில், தலைவர் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்றும் கூறினர். கூட்ட அறிவிப்பை தாமதமாக தெரிவிக்கிறார் முன் கூட்டியே தெரிவிப்பதில்லை என்றனர். மேலும் எல்லாபுரம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு இன்று ஒரே ஒரு அதிமுக கவுன்சிலர் மட்டுமே வந்தார். அவரும் சிறிது நேரத்தில் உறுப்பினர்கள் யாரும் வரவில்லை நினைத்து வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!