திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் வழக்கறிஞர் சுரேஷ் , வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சென்னங்காரணி ஊராட்சியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க 2 இடங்களில் அமைப்பது , மாகரல் பகுதியில் புதிய பைப்லைன் அமைத்தல் பணி என ரூ. 36 லட்சத்து 22 ஆயிரத்து 238 ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வெங்கல் ஊராட்சியில் கால்வாய் அமைத்தல் பணி , சேத்துப்பாக்கம் , தாமரைப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் கால்வாய் அமைப்பது, கோடுவெளி, திருநிலை , அக்கரப்பாக்கம், ஆகிய பகுதிகளில் கழிவறை கட்ட ரூ. 36 லட்சத்து 22 ஆயிரத்து 237 ஒதுக்கீடு செய்யப்பட்டது,
அழிஞ்சிவாக்கம், நெய்வேலி, திருக்கண்டலம், பூச்சி அத்திப்பேடு, ஆத்துப்பாக்கம், ஆலப்பாக்கம், குமரப்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் பேவர் பிளாக் மற்றும் தார்ச்சாலை அமைத்தல் பணிக்காக ரூ. 48 லட்சத்து 29 ஆயிரத்து 650 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆக மொத்தம் ரூ. 1 கோடியே 20 லட்சத்து 74 ஆயிரத்து 125 செலவில் பல்வேறு பணிகள் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் கோகிலா, வெங்கல் திருமலை சிவசங்கரன், சியாமளா ஸ்ரீதர், குணசேகரன், சுரேஷ், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குழந்தைவேல், சரவணன், தட்சிணாமூர்த்தி, லதா அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu