Electric Train Chain Snatching மின்சார ரயிலில் பயணித்த பள்ளி ஆசிரியையின் தங்க நகை பறிப்பு

பெண்கள் தனியே வெளியே செல்லும் போது தங்க நகைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். (கோப்பு படம்)
Electric Train Chain Snatching
கும்மிடிப்பூண்டி மின்சார ரயிலில் பள்ளி ஆசிரியர் கழுத்தில் இருந்து 8. சவரன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டதால் கொருக்குப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கமாக சென்னையில் இருந்தும் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் இருந்தும் கும்மிடிப்பூண்டி, ஆத்துப்பாக்கம், தேர்வழி, பெத்துகுப்பம், அத்திப்பட்டு, மீஞ்சூர், திருவொற்றியூர், விம்கோ நகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் மேற்கண்ட பகுதிக்கும் வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் தினந்தோறும் மின்சார ரயிலில் செல்வது வழக்கம்.
இந்நிலையில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த மின்சார ரயிலில் சென்னையைச் சேர்ந்த லிங்கச்செல்வி( வயது 50) இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் நேற்று பணிக்கு ரயிலில் வந்து கொண்டிருக்கும்போது கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே திடீரென இரண்டு வாலிபர்கள் லிங்கச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்கச் சங்கிலி அறுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.
லிங்கச்செல்வி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் இறங்கி துரத்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இதுகுறித்து லிங்கச்செல்வி கொருக்கப்பேட்டை ரயில்வே போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.இந்த சம்பவமானதுமின்சார ரயில் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.தினந்தோறும் இதுபோல் பயணம் செய்யும் பெண்மணிகள் தங்கை நகையைத் தவிர்க்க வேண்டும்...இல்லாவிட்டால் பாதுகாப்பாக அணிய வேண்டும். ஆனால் ஒரு சில பெண்கள் பெரிய தங்க சங்கிலியோடு பயணம் செய்வதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என அங்குள்ள பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர். பகலிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறதென்றால் இரவில் எப்படி இருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu