அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிள் வினியோகம்

Free Bicycle | Tiruvallur News
X

திருவள்ளூர் அருகே கன்னிகை பேர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

Free Bicycle - திருவள்ளூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிள் வினியோகம் செய்யப்பட்டது.

Free Bicycle -திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகை பேர் மற்றும் பெரியபாளையம் ஆகிய 2. மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும்293 மாணவ மாணவிகளுக்கு வளாகத்தில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி தி மு க.ஒன்றிய செயலாளர் சத்திய வேலு தலைமையில் கன்னிகை பேர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் கலந்துகொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்து பின்னர் அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் முன்னதாக அனைவரையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பேரன்புச்செல்வி, பெரியபாளையம் தலைமை ஆசிரியர் சம்பத் ஆகியோர் வரவேற்றார் இதில் நிர்வாகிகள் ஒன்றிய துணைச் செயலாளர் டி. கே.முனிவேல், ஊராட்சி செயலாளர் வெங்கடாசலம், உதயகுமார், செல்வகுமார், பிரேம் ராஜ், ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் பள்ளியில் துணை தலைமை ஆசிரியர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!