ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த மாற்றுத்திறனாளி கைது

கைது செய்யப்பட்ட மனோஜ் ரவாளியா.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயிலில் மாற்றுத்திறனாளி மூன்று சக்கர வாகனத்தில் கடத்தி வந்த 35 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயில் பகுதியில் மேற்கு வங்காள தேசத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி மனோஜ் ரிவாளியா வயது 42 சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கவரப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தொடர்ந்து அவரை கண்காணித்து வந்த கவரப்பேட்டை போலீசார் கடந்து 5 நாட்களுக்கு முன்னர் அவர் ஆந்திர மாநிலம் நோக்கி 3 சக்கர வாகனத்தில் சென்றதை நோட்டமிட்டனர்.
அதன் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தபோது அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த போது அவரைப் பின் தொடர்ந்த போது அவர் பெருவாயில் கிராமத்தில் வாடகை வீட்டிற்கு செல்லும்போது கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனத்தில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு அதில் 18 பொட்டலங்களில் மறைத்து வைத்திருந்த 35 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகையில் ஆந்திராவிலிருந்து போதை பொருள் அதிக அளவில் கடத்தி வருவதாகவும், ஆந்திர மாநிலம் தமிழகம் இணையும் எல்லைப் பகுதியில் அடிக்கடி இது போன்று போதை பொருள் சிக்குவதாகவும், இந்த போதை பழக்கத்திற்கு படித்த இளைஞர்களும் பலரும் அருமையாக தங்கள் வாழ்க்கையை தொலைத்துக் விடுவதாகவும், இதுபோன்று செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிகாரிகள் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்று போதை சம்பந்தமான கஞ்சா, போதை மாத்திரை கடத்தல் தடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu