பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய கோரிக்கை

பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய கோரிக்கை
X

பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடம் பாழடைந்து காணப்படுகிறது

செங்கரை காட்டு செல்லியம்மன் கோவில் அருகே பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டிடத்தை சீர் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். செங்கரை ஊராட்சியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் புகழ்பெற்ற சுயம்பு எழுந்தருளி காட்டுச் செல்லியம்மன் கோவில் ஒன்று உள்ளது.

இந்த கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, தண்டலம், பாலவாக்கம், பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வியாழக்கிழமை மற்றும் நாட்களில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அருகில் உள்ள குளத்தில் தண்ணீரில் நீராடி அந்த தண்ணீரில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் இட்டு வழிபாடு நடத்துவார்கள்.

இந்நிலையில் இங்கு எவ்வித வசதிகள் இல்லாத காரணத்தினால் குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்தக் கோரிக்கை ஏற்று 2011- 2012 நிதியாஆண்டில் அன்றைய கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சி.எச். சேகர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ..4.75 மதிப்பீட்டில்10 அறைகளைக் கொண்ட குளியல் கழிவறை கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது.

ஒரு மாதம் மட்டும் பயன்படுத்தி வந்த நிலையில். அதற்குப் பின்னர் மூடப்பட்டது. தற்போது கட்டிடத்திற்கு சுற்றி அடர்ந்த முட்புதர் மண்டிகள் வளர்ந்து விஷத்தன்மை கொண்ட பாம்பு, பூச்சிகளுக்கு இருப்பிடமாக மாறியுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் குளிப்பதற்கு உடைகளை மாற்றுவதற்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் தெரிவிக்கையில், புகழ்பெற்ற காட்டு செல்லியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட இந்த கட்டடம் பராமரிப்பு இல்லாத காரணத்தினால் மூடப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் கோவிலில் வழிபாடு செய்ய குளிப்பதற்கு வேறு வழியில்லாமல் குளத்தில் சென்று நீராடி, அந்த தண்ணீரை வைத்து தான் பொங்கல் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டியுள்ள சிமெண்ட் குடிநீர் தொட்டியும் குடிநீர் இல்லாமல் பழுதடைந்துள்ளதாகவும். இதனை சீர் செய்து பக்தர்கள் பொது மக்களின் வசதிக்காக இதனை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!