கோவிலில் சாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு

கோவிலில் சாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு
X

கோவிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் 

கும்மிடிப்பூண்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்தின் போது சாமி தரிசனம் செய்யும் விவகாரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் இரு சமுதாயத்தினருக்கு இடையே வாக்குவாதம்

வழுதலம்பேடு கிராமத்தில் சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள எட்டியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் பட்டியலின மக்கள் இக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய தொடர்பாக அதே நிலையில் பட்டா வழியில் மேற்கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் செல்ல பிரச்சனை ஏற்பட்ட காரணத்தினால். அன்று கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது இந்த விழாவில் இரு சமுதாயத்தினருக்கு இடையே எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் அமைதியாக விழா நடைபெற வேண்டும் என்று கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இந்தப் பேச்சுவார்த்தையில் பட்டியலின மக்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற பேசிய பேச்சு வார்த்தையில் இரு சமுதாயத்தினரும் ஒப்புக்கொண்டனர்.

இதனை அடுத்து கும்பாபிஷேகத்தில் இரு பரப்பினருக்கிடையே எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் பலத்து போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் அமைதியாக நடந்து முடிந்தது.

இதனிடையே பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய மற்ற சமுதாயத்தை சார்ந்த நபருக்கு சொந்தமான பட்டா நிலம் வழியாக கோவிலுக்கு புறப்பட்டபோது அவர்களை வழிமறித்து இவ்வழி எங்களுக்கு சொந்தமானது இவ் வழியாக கோவிலுக்கு சென்று சாமியை வழிபடக்கூடாது என அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு சமுதாயத்தினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி கும்மிடிப்பூண்டி-ரெட்டம்பேடு சாலையில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணகுமார், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி, ஆய்வாளர் வடிவேல் முருகன், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் வந்து மீண்டும் இரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்

மேலும் இந்த பிரச்னை சம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் ஓடி வந்து எட்டியம்மன் ஆலய நுழைவு வாயில் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்தியில் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் இரண்டு தரப்பினருக்கு இடையே பேசிய பேச்சுவார்த்தை இருதரப்பினரும் ஏற்கவில்லை

இதனையடுத்து இரண்டு தரப்பினரும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்த்துக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகிகளுடன் கலந்து பேசி தற்பொழுது கோவில் கருவறை வாசல் மட்டும் வருவாய்த்துறை முன்னிலையில் சீல் வைக்கப்படும் எனவும் தெரிவித்த போது சிலர் கோஷங்களை எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் மக்களின் நலனை கருதி வட்டாட்சியர் சரவணகுமார் முன்னிலையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் கருவறை மற்றும் நுழைவு வாயில் கதவுகளுக்கு சீல் வைத்தனர் மேலும். கிராமம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது இப்ப பிரச்சினையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்