கும்மிடிப்பூண்டி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
X

கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கும்மிடிப்பூண்டி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி ஈச்சங்காடுமேடு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் பல இடங்கள் நீர்நிலை ஆக்கிரமித்து கட்டிடம் வீடு கட்டப்பட்டுள்ளதாக ஏற்கனவே புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு நீர் நிலையில் உள்ள வீடுகளை வருவாய் துறை சார்பாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதே பகுதியில் தனியார் இரும்பு உருக்கு ஆலை உள்ளது.இந்த இரும்பு உருக்கு ஆலையில் எதிரே நீர்நிலை ஆக்கிரமித்து சாலை போடப்பட்டுள்ளதாக ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் பூவை பாபு தலைமை தாங்கினார்.ம.தி.மு.க. நிர்வாகிகள் தனஞ்செழியன், ரவிக்குமார், ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரதாப் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து கண்டன உரையாக மாநில தேர்தல் பணி செயலாளர் ஆவடி அந்திரிதாஸ் கண்டன உரை ஆற்றினார். இந்த உரையின் போது இரும்பு உருக்காலை நிர்வாகம் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்துள்ளதனை அகற்றக்கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதையறிந்த வருவாய் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக வட்டாட்சியர் ராமன் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் பின்பு கூட்டம் கலைந்து சென்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ம.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!