கும்மிடிப்பூண்டியில் நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டியில் நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்
X
கும்மிடிப்பூண்டியில் நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் நேமள்ளூர் பஞ்சாயத்து மாதர்பாக்கத்தில் ஏழைகளுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து அரசு அதிகாரிகள் ஆதரவோடு விற்பனை செய்து வருவதை கண்டித்து தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நிறுவனர் டாக்டர் ரபீக் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்விஜயலட்சுமி தேசிய செயலாளர் சுமலதா மற்றும் சமூக ஆர்வலர் அன்பு, மாதர்பாக்கம் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இதற்கான புகார் மனு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai healthcare technology