பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்த பாஜக எம்பி அனுராக் தாகூருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை வைத்தார். அப்போது பேசிய பாஜக எம்பி அனுராக் தாகூர் ராகுல் காந்தியை விமர்சித்து இருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு தரப்பினர் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வரும் சூழலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரை விமர்சித்த பாஜக எம்பி அனுராக் தாகூருக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்த பாஜக எம்பி அனுராக் தாகூர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu