Demand Rain Death Relief Fund மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வாத்து குஞ்சுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
நோயினால் பாதிக்கப்பட்டு வரும் வாத்து குஞ்சுகள்.
Demand Rain Death Relief Fund
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டனமல்லி ஊராட்சியில் 1000 க்கும் மேற்பட்ட கிராமப் புற மக்கள் வசித்து வருகின்றனர்.இங்குள்ள மக்கள் நெல், வாழை, கரும்பு, உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகளை விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பருவ மழை காரணமாக ஊராட்சி முழுவதும் மழை பெய்து ஆங்காங்கு மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின இருந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த விக்ரம் சாய், ராஜு ஆகிய இரண்டு குடும்பங்கள் விவசாய பகுதிகளில் வாத்து குஞ்சுகளை வைத்து வளர்த்து வருகின்றனர்.
கனமழை காரணமாக அனைத்து வாத்து குஞ்சுகள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் தற்காலிக கூடாரம் அமைத்து பத்தாயிரம் வாத்துக் குஞ்சுகளை வளர்த்து வந்தனர். புயல் மழை காரணமாக கடும்மழை பெய்தது இதனால் அனைத்து வாத்து குஞ்சுகள் இருக்கும் இடத்திலேயேமூழ்கியது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட வாத்து குஞ்சுகள் இறந்தது.
இதனை சம்பந்தப்பட்ட கால்நடைத் துறை அதிகாரிகள் இதுவரை அங்கு சென்று பாதிப்புகள் பார்க்காதது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உள்ள பத்தாயிரம் வாத்து குஞ்சுகள் நோய் பாதிப்புக்கு உள்ளாகிவிடும் எனவும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை சம்பந்தப்பட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் கெட்டனமல்லி இருந்து சிறுபுழல்பேட்டை செல்லும் விவசாய பகுதியில் உள்ள மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து வாத்துக் குஞ்சுகளை வேறு இடங்களில் மாற்ற வேண்டுமென எனவும் குஞ்சுகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை கால்நடை மருத்துவர்கள் உடனடியாக செய்ய வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இறந்து போன வாத்து குஞ்சுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu