தோக்கம்பூர்: வியாபாரியை கத்தியால் குத்திய கூலித்தொழிலாளி கைது

தோக்கம்பூர்: வியாபாரியை கத்தியால் குத்திய கூலித்தொழிலாளி கைது
X

பைல் படம்

தோக்கம்பூர் கிராமத்தில் வியாபாரியை கத்தியால் குத்திய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஆரம்பாக்கம் அருகே உள்ள தோக்கம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (45) இவர் ரயிலில் சிறு வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது பொருட்களை அதே கிராமத்தை சேர்ந்த பாபு (45) என்பவர் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முன்விரோதம் காரணமாக நாகராஜை கூலித்தொழிலாளி பாபு கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த நாகராஜ் கும்மிடிபூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை நேற்று கைது செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்