கும்மிடிப்பூண்டியில் வேளாண் துறை மூலம் பயிர் காப்பீடு திட்ட காணொலி காட்சி
சிறப்பு முகாமில் கலந்துகொண்ட விவசாயிகள்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வேளாண்துறை முலம் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆணையாளர் அலுவலகத்தில் விளக்கப்பட்டது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உழவர்களின் பங்களிப்பே நமது முன்னுரிமை என்ற சிறப்பு முகாம் அனைத்து ஊராட்சிபகுதிகளிலும் கடந்த 24 முதல் 1ம் தேதி வரை நடைபெற்ற உள்ளது. இந்த முகாம்களில் இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான பால் பண்ணை கால்நடை பராமரித்தல் மற்றும் மீன் வளர்த்தல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்கடன்களுக்கும் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் நடைமுறை கடன்களுக்கும் ரூ 3 லட்சம் வரையிலும் வங்கி கடன் பெற முடியும். விவசாய கடன் அட்டை மூலம் விவசாயிகள் 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் பெறலாம்.
மேலும் இக்கடன் பெற்ற விவசாயிகள் நிற்னையிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முறையாக தவணை தவறாமல் திரும்பச் செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெற வாய்ப்புள்ளது. விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ1.60 லட்சம் வரை எவ்வித பிணையமும் இன்றி கடன் வழங்கப்படும்.
விவசாய கடன் அட்டை கடன் பெற விவசாயிகள் தங்களின் நில ஆவணங்கள்( பட்டா/ சிட்டா மற்றும் அட ங்கல்) ஆதார் அட்டை (கண்டிப்பாக) பான் கார்டு, குடும்ப அட்டை (அல்ல து) வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங் களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரரின் கடன் மனுக்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு சிபில் விவசாயிகளின் விவரம் மற்றும் வங்கிகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நிலம் பயிர் அளவிடு பொருத்து கடன் வழங்கப்படும். எனவே இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் (விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான பால் பண்ணை கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்த்தல்) அனைவரும் 24-04 2022 முதல் 01-5 2022 வரை நடைபெற உள்ள ஊராட்சி அளவிலான இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பித்து விவசாய கடன் அட்டை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி வேளாண்துறை உதவி இயக்குனர் அறிவழகன் தலைமையில் துணை வேளாண் அலுவலர் ரமேஷ், வேளாண் அலுவலர் நவீன்குமார் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் தோட்டக்கலை அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந் தனர்.
நிகழ்ச்சியில் ஏராளமான விவசா யிகள் பங்கேற்று காணொளி காட்சியை கண்டுகளித்தனர்.
.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu