ஸ்ரீராமபுரம் கண்டிகை கிராமத்தில் சுடுகாட்டிற்கு பூமி பூஜை

ஸ்ரீராமபுரம் கண்டிகை கிராமத்தில் சுடுகாட்டிற்கு பூமி பூஜை
X

ஸ்ரீராமாபுரம் கண்டிகை கிராமத்தில் , சுடுகாடு சுற்றுச்சுவர் மற்றும் எரி மேடை கட்டும் பணிக்கான பூமி பூஜையை, ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் தொடங்கி வைத்தார்.

ஸ்ரீராமபுரம் கண்டிகை கிராமத்தில் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் எரிமேடை கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட, ஸ்ரீ ராமாபுரம் கண்டிகை கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூபாய்.19.43 லட்சம் மதிப்பீட்டில் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் மற்றும் எரிமேடை காத்திருப்பு மேடை உள்ளிட்டவை பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதற்கான அடிக்கல் நாட்டுவிழா, ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், 2.வது வார்டு உறுப்பினர் வைஷாலி பாலாஜி மற்றும் ஸ்ரீ ராமாபுரம் கண்டிகை கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி